தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருதினை தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.03.2022) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அலுவலகள் மாநாட்டில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையில் 2021ம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருதினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்-க்கு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் டி.ஜகந்நாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


