ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து அனைத்து மகளிர்களும் ஒரே சீருடை அணிந்து வந்து மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் இந்த நிகழ்சிக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வசந்தாமணி தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்சியை வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் காமாட்சி வரவேற்று பேசினார். ஊராட்சி செயலர் சுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் பிரேம்சந்தர், வட்டார வளர்சி அலுவலர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அன்றோ, ஒன்றியக்குழு தலைவர் சந்தாமணி மற்றும் சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சாரி கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசினார்கள்.
விளையாட்டு போட்டிகளில் அலுவலக பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனி தனியாக விளையாட்டு போட்டிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற ஆண்கள் பெண்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டனர். முடிவில் அனைத்து மகளிர்களுக்கும் புத்தாடை அனிவித்து கவுரவபடுத்தினர்.
விழாவின் சிறப்பு விருந்தினர் மருத்துவர் வனிதா சங்கர், விழாவினை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலெட்சுமி போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.


