பாஜக 4 மாநிலங்களில் அமோகமாக வெற்றி பெற்றதை பாஜகவினர் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி பஜாரில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்டப் பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் சித்ராங்கதன் முன்னிலை வகித்தார். இந்து முன்னனி மாவட்டப் பொதுச்செயலாளர் சக்திவேல், அரசு தொடர்பு பிரிவு பட்டாபிராமன், அமைப்பு சாரா பிரிவு வேல்குமார், மேற்கு ஒன்றிய துணைத்தலைவர் கண்ணன், மேற்கு ஒன்றிய அமைப்புச்சாரா பிரிவு தலைவர் மணவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


