தூத்துக்குடியில் தாமிரவருணித் தமிழ்வனம், திருநெல்வேலி ஸ்ரீபவிஷ்ணா அகாடமி, மகாகவி பாரதியார் இலக்கிய கழகம் சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
தாமிரபரணி தமிழ் வன அமைப்பின் சார்பில் கூட்டுறவு வங்கி ஓய்வுபெற்ற முன்னாள் பொது மேலாளர் ஏ.ஆர்.லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சோனை தொடக்க உரை நிகழ்த்தினார். டாக்டர் ஈ.அருணாசலம், தொழிலதிபர் டி.ஏ.தெய்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா நடுவராக இருந்து இந்த பட்டிமன்றத்தை நடத்தினார். சின்ன சின்ன பொய்கள் வாழ்க்கையில் சுமையே.. சுகமே… என்ற தலைப்பில் தூத்துக்குடி அபிராமி மகாலில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்தில் ரேவதி சுப்புலட்சுமி, வழக்கறிஞர் ஜான்சி, கவிதா ஜவகர் ஆகியோர் சின்ன சின்ன பொய்கள் வாழ்க்கையில் சுமையே என்று வாதாடினர். பேச்சாளர்கள் ராஜ்குமார், கருணாநிதி, ராஜா ஆகியோர் சின்ன சின்ன பொய்கள் சுகமே என்ற தலைப்பிலும் வாதாடினார்கள். தமிழ் மற்றும் நகைசுவை உணர்வு கலந்த இந்த பட்டிமன்றத்தை தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் மட்டுமன்றி திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள்,ஆசிரியர்கள்,தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். பட்டிமன்ற இறுதியில் சி.எம். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளி முத்தையா நன்றியுரை ஆற்றினார்.


