தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை நேரம் வந்துள்ளதால் இந்த பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவற்காக இந்த கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூடைகள் கொள்முதல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையத்தில் 140 கிலோவிற்கு வெளி மார்க்கெட்டில் 1800 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அரசு கொள்முதல் நிலையங்களில் 2800 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


