தூத்துக்குடி காமராஜ் கல்லூரில் தொல்லியலுக்கான மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. இதன் துவக்கவிழாவில் கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். வரலாற்று துறை முதுகலை மாணவி சரண்யா வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கருத்தரங்கை துவக்கிவைத்து பேசினார். தர்மபுரி அரசு கலை கல்லூரி உதவி பேராசியர் முனைவர் சந்திரசேகர் கருத்தரங்கில் பேசினார். வரலாற்று துறை இளங்கலை மாணவி துர்கா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரி வரலாற்று துறை தலைவர் முனைவர் தேவராஜ் தலைமையில் வரலாற்று துறையினர் செய்திருந்தனர்.


