மதுரை மேலூர் சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மேலூர் சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சீர்மரபினர் உரிமை மீட்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிபாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் வெள்ள முருகன், பாஜக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மதுரை மேலூர் சிறுமி இறப்பு குறித்து உரிய விசாரணை செய்யப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட பொருளாளர் துரை சரவணன், சுடலை, சுடலைமணி, சின்னம்மா பேரவை ஒன்றிய அவைத்தலைவர் முத்துராமலிங்கம், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் சந்தானகிருஷ்ணன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


