திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் அருகே உள்ள எடுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் பூல்பாண்டி. இவரது மனைவி ரெஜினா. இவர்களுக்கு கொம்பையா, வினோத்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பூல்பாண்டி கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று அவரது உறவினர் கூந்தன்குளத்தில் இறந்துள்ளார். அவரது அஸ்தியை கரைப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் கரைக்க பூல்பாண்டி அவரது உறவினர்களுடன் வந்துள்ளார்.
அப்போது திடிரென்று ஆற்றில் இறங்கிய பூல்பாண்டி தண்ணீரில் சிக்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் ஆற்று தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1 மணி நேரம் தேடி பூல்பாண்டியின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.