தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் எஸ்.என்.பட்டியூரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவர் வீட்டில் இன்று அவர் வளர்த்த ஆட்டுக்குட்டி மூன்று குட்டிகளை ஈன்றது. 2 குட்டிகள் சாதாரண நிலையில் இருந்தது. ஒரு குட்டி மட்டும் நீர்யானை போன்ற முகத்துடன் பிறந்தது.
குட்டி மேல் முடி இல்லாமல் இருந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆனால் அந்த குட்டி பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது.


