சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட், வட்ட வழங்கல் அலுவலர் பிரபு ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் வாகன சோதனைகள் ஈடுபட்டனர்.
அப்பொழுது இன்று காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு செல்லும் ஆம்னி பஸ் நிறுத்தி சோதனை செய்தபோது பஸ்ஸில் இருந்த எவ்வித ஆவணமும் இல்லாமல் 128 டிபன் பாக்ஸ்களை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த பொருட்களை சாத்தான்குளம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெரோம் முன்பு ஒப்படைக்கப்பட்டது.


