கருங்குளம் அருகே உள்ள கிளாக்குளத்தில் பொங்கல் விழா நடந்தது. இந்த பொங்கல் விழாவில் கிராம மக்கள் சார்பாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது.
அதன்பின்னர் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழச்சிக்குகண்ணன் தலைமை வகித்தார். பண்டாரம், தங்கத்துரை, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பங்கேற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாராயணன், அர்ஜுனன், அன்பு ரகுபதி, கணபதி முருகன், சொக்கலிங்கம், முத்துக்குட்டிபண்டாரம், ராம்குமார், ராஜேஷ், பசுமுத்துபெருமாள், சிவபெருமாள், சரத்குமார், சிவா மற்றும் வாலிப நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


