செய்துங்கநல்லூர் பீமா அம்மா மாஹீன் அபுபக்கர் ஒலியுல்லா தர்காவில் 80வது ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கந்தூரி விழாவை முன்னிட்டு தர்காவில் இருந்து கொடி ஊர்வலமாக முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தது. அதன் பின்னர் தர்கா முன்பு உள்ள கொடி மரத்தில் கந்தூரி விழா கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் மற்றும் கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சர்வேயர் அலி, முகமது ஜாமியா பள்ளி வாசல் ஹசன் ஞானியார், ஷேக் அசரத், அரக்கோணம் இமாம் முகமது ராபி, திட்டுவிளை இமாம் அசன் அலியார், மேலப்பாளையம் அப்துல் காதர், அபுபக்கர், டாக்டர் கலில் ரகுமான், ஒபி முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் பீமா தர்கா விழா பொறுப்பாளர் மற்றும் நர்வாகி புகாரி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.


