ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ டிரைவரை மண்வெட்டி கணையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செம்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் வைத்திலிங்கம் (28). ஆட்டோ டிரைவர். கடந்த 14ம் தேதி இரவு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம் பகுதிக்கு சென்று விட்டு அங்கு ஆட்டோவில் பயணியை இறக்கி விட்டுள்ளார். அப்போது மதுபோதையில் வந்த சிவராமமங்கலம் பூல்பாண்டி (47) என்பவர் வைத்தி லிங்கத்தை வழிமறித்து பேசி மண்வெட்டி கணையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வைத்திலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, பூல்பாண்டியை கைது செய்தனர்.


