தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா தெற்கு காரசேரி கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் பேபி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் மாடத்தி முன்னிலையில் நடந்தது .கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு வேஷ்டி சேலையை வழங்கினார் மற்றும் எண்ணாயிரத்தான் பஞ்சாயத்து செயலர் முருகன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.


