தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் பரிசு தொகுப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் கடை மிகவும் பழுதான நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கட்டிட மேற்கூரை ஒழுகுவதால் பொதுமக்களுக்கு வழங்க இருக்கும் பொருட்கள் நனைந்து வீணாகிறது என்று தெரிவித்தனர்.
கோரிக்கையை ஏற்று ரேஷன் கடையின் உள்ளே சென்று கட்டிடங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கட்டிடத்தின் ஆண்டு மற்றும் தன்மைகுறித்து அதிகாரிகளிடம் விளக்கங்களை கேட்டறிந்தார்.
பின்பு அவர் கட்டிடத்தை முறையாக ஆய்வு செய்து அதன் பின்னர் விரைவில் விரைவில் புதிய ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல் சலாம், துணைத்தலைவர் சேர்மதுரை, விஏஓ அருணா, கடை ஊழியர் ஆழ்வார், செயலர் பிராங்கிளின், தலையாரி ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



