செய்துங்கநல்லூரில் கொரோனா தடுப்பூசி முகாம் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் வைத்து நடந்தது. பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த முகாமை பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் சர்பீன் , செவிலியர் விஜி, பஞ்சாயத்து கிளார்க சங்கரபாண்டியன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


