ஆறாம்பண்ணையில் இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறாம்பண்ணை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல் காதர் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உப தலைவர் அப்துல்கனி ஊராட்சி உறுப்பினர்கள் இப்ராஹிம் மரியம் பானு, சுகரா, செய்தலிபாத்திமா, முகமது பாத்திமா, மக்கள் நலச் சங்கத் தலைவர் சைது, கிராம நிர்வாக அதிகாரி ஆனந்த் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


