சென்னல்பட்டியில் விவசாயிகளுக்கு நெற்பயிர் சாகுபடியின் போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நெற்பயிரில் வரிசைநடவு ஒருங்கிணைந்த நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி பயிற்சி சென்னல்பட்டி கிராமத்தில்பயிற்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம் மற்றும் உழவர் நலம்) ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் பயிற்சிக்கு வரவேற்புரை ஆற்றி வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.
கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உழவியல் துறை இணை பேராசிரியர் ஜோசப் நெற்பயிரில் வரிசைநடவு செய்வதன் அவசியம் குறித்தும் நிர்வாகம் பற்றி எடுத்துரைத்தார். மேலும் கருங்குளம் வட்டார வேளாண்மை அலுவலர் காயத்ரி பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தளை உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் கருங்குளம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சென்னல்பட்டி கிராம விவசாயிகள் 40 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன் நன்றியுரை கூறினார்.
ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பகவதி குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


