தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் கள்ளர் வெட்டு திருவிழா கடந்த 17.11.2021 அன்று தொடங்கி நாளை 17.12.2021 முடிவடைகிறது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்றும் (16.12.2021), நாளையும் (17.12.2021) நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று (16.12.2021) கோவில் வளாகம் மற்றும் கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறும் பகுதிக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருச்செந்தூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


