தாதன்குளம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாத பழனி ரயிலை கண்டித்து நாளை மதியம் 2 மணிக்கு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். இதற்காக தாதன்குளம், கருங்குளம், கிளாக்குளம், தெற்குகாரசேரி, வல்லக்குளம், அரசர்குளம், இராமானுஜம்புதூர், சேரகுளம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த போராட்டத்துக்கு தாதன்குளம் பஞ்சாயத்து தலைவர் சீதாலெட்சுமி தலைமை வகிக்கிறார். சமூக சேவகர் சுந்தர் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இதையட்டி தாதன்குளம் பொதுமக்கள் சார்பில் தாதன்குளம் இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் மனு கொடுத்தனர். செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர்.
இதேபோல் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலும் பொதுமக்கள் சார்பில் பேராட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனால் செய்துங்கநல்லூர் தாதன்குளம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


