ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயிலில்களில் ஒரு கால பூஜையை துவங்க தூத்துக்குடி உதவி ஆணையாளர் தி.சு.ரோஜாலிசுமதா ஆய்வு செய்தார். இவர் அகரம், முறப்பநாடு, வசவப்பபுரம், முத்தாலங்குறிச்சி ஆகிய இடங்களில் அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களை ஆய்வு செய்தார். முத்தாலங்குறிச்சி சிவன் கோயிலுக்கு வந்த அவரை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஊர் பிரமுகர்கள் லெட்சுமணபாண்டியன், வள்ளி, சடகோபால் உள்பட பலர் வரவேற்றனர். முத்தாலங்குறிச்சி சிவன் கோயிலுக்கு ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்த அறநிலைதுறைக்கு நன்றி கூறினர். மேலும் பழமையான இந்த கோயிலை திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உதவி ஆணையாளர் தி.சு.ரோஜாலிசுமதா ஆவண செய்வதாக வாககளித்தார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் இன்ஸ்பெகடர் நம்பி உடன் வந்தார்.


