திருநெல்வேலி மாவட்டம், முருகன்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே கிளினிக் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் கிளினிக்கை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது கிளினிக் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கிளினிக்கில் இருந்த டார்ச் லைட் மற்றும் மருந்து மாத்திரைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதே போல் கருங்குளம் சிவன் கோவில் அருகே உள்ள பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து சிகரெட், சோப்பு மற்றும் 500 ரூபாய் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் செய்துங்கநல்லூர் எஸ்.ஐ.கருத்தையா தலைமையில் போலிசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர்.


