செய்துங்கநல்லூர் இல் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.. செய்துங்நல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். சமூக சேவகர் சுடலை முன்னிலை வகித்தார். ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புப் பட்டா மாறுதல் முகாமில் மக்கள் பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி, கிராம நிர்வாக அலுவலர்கள் கருங்குளம் மணி மாலா, வல்ல குளம் சக்தி வேல், விட்டிலா புரம் கமல், தெற்கு காரசேரி கந்தசுப்பு உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


