ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் இதன் காரணமாக ரெட் அலெர்ட் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து இந்த தண்ணீரானது மாலைக்கு 20 ஆயிரம் கன அடி நீரை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தாமிரபரணி கரையோரத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


