இன்று மாலை 3 மணி அளவில் கட்டாரி மங்கலம் கிராமத்தில் உதவி ஆட்சியர் தலைமையில் அந்த கிராம மகளிர் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குத் தையல் பயிற்சி துவங்கி வைக்கப்பட்டது. முன்னதாக கிராம ஆய்வின்போது மகளிர் குழு சார்பில் தையல் பயிற்சி வேண்டி விருப்பத்தை நேரில் தெரிவித்தனர்.
உதவி ஆட்சியர் முயற்சியால் TVS தொண்டு நிறுவனம் மற்றும் TNRTP சார்பில் தையல் பயிற்சி 30 நாட்களுக்குக் கொடுக்கப்பட உள்ளது.
தொடக்க நாளான இன்று 11 11 2021 உதவி ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கிராம ஊராட்சி தலைவர் கீதா கணேசன், டிவிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பில் விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.
இந்தத் தையல் பயிற்சி துவக்க விழாவில் சாத்தான்குளம் வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வெங்கடேஷ்வரபுரம் குறுவட்ட ஆய்வாளர்,உதவி திட்ட அலுவலர் (மகளிர்), கட்டாரி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர், கிராம ஊராட்சி செயலர் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி உதவி இயக்குனர் (வேளாண்மை) தலைமையில் மானிய விலையில் மணி என்பவருக்குத் தார்ப்பாய் வழங்கப்பட்டது.
மேலும் கிராமத்தில் பயிர் கணக்கெடுப்பு குறித்து கிராம கணக்கு அடங்கல் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் போது கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர், ஆழ்வார்திருநகரி உதவி இயக்குனர் (வேளாண்மை) வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் உடனிருந்தனர்.


