சாத்தான்குளம் அருகே நாம் தமிழா் கட்சிப் பிரமுகரை பீா் பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மீரான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (45). நாம் தமிழா் கட்சியின் ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய துணைத் தலைவராக உள்ளாா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த ஆ. சுப்பையா (40) என்பவருக்கும் இடப் பிரச்சினையால் முன்விரோதம் உள்ளதாம்.
இந்நிலையில், சம்பவத்தன்று அருணாசலம் பைக்கில் சென்றபோது, அவரை வழிமறித்து பீா் பாட்டிலால் சுப்பையா குத்தினாராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் கொலை முயற்சி வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள சுப்பையாவை தேடி வருகிறாா்.


