தென்திருப்பேரையில் நகரப் பஞ்சாயத்து அலுவலக பெண் ஊழியரிடம் 2 பவுன் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை மண்மேட்டைச் சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி தனலட்சுமி (47). இவர் நகரப் பஞ்சாயத்து அலுவலகத்தில் டெங்கு மஸ்தூர் ஆக வேலை பார்த்து வருகிறார். கணவர் சங்கரநாராயணன் தென்திருப்பேரை நகரப் பஞ்சாயத்தில் பிளம்மிங் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இன்று மதியம் 1½ மணிக்குத் தனலட்சுமி தென்திருப்பேரை தெற்கு ரத வீதி வழியாக நகரப் பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில், அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கூச்சலிட்டவாறு பின்தொடர்ந்து ஓடினார். அக்கம் பக்கத்தினரும் திரண்டும் மர்மநபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.


