வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா நடந்தது. அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் தலைமையில் வெங்கடேஷ் பட்டர் சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்களுடன் அன்னாபிஷேகம் செய்தனர்.திரளாக வந்திருந்த பக்தர்கள் ஜெய ஜெயசங்கர எனப் பக்தி கோஷமிட்டனர். விழா ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்


