தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத் தேர்தல் விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணாமாக கால்டுவெல் பள்ளியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் (அக்.20 ஆம் தேதி) நடைபெற்றது. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். மற்றும் எஸ்.டி.கே ராஜன் என 2 அணிகளாக போட்டியிட்டனர்.இத்தேர்தலில் டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்ட உப- தலைவர் வேட்பாளர் குருவானவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ காரியதரிசி வேட்பாளர் இம்மானுவேல் வான்ஸ் டாக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவி பிராமனம் கால்டுவெல் பள்ளியில் உள்ள திருமண்டல அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இந்நிலையில் வெற்றி பெற்ற டி.எஸ்.எப் அனியினர் திருமண்டல அலுவலகத்தினை திறந்து பதவி பிராமனம் செய்ய வந்தனர். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.டி.கே.ராஜன் அனியை சேர்ந்தவர்கள் அலுவலகத்தை திறக்க மறுத்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வந்த டவுன் டிஎஸ்பி கனேஷ் தலைமையிலான போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுதினார். அதனை தொடர்ந்து கால்டுவெல் பள்ளி சுற்றி போலீஸ் குவிக்கபட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


