தூத்துக்குடி வெள்ளப்பட்டி தூய நல்ல ஆலோசனை மாதா ஆலய திருவிழாவில் நேற்று மாலை நற்கருணை பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட வெள்ளப்பட்டி பங்கில் அமைந்துள்ள தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயத் திருவிழா கடந்த 7ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை, திருப்பலி மற்றும் மாலையில் ஜெபமாலை மாதா பிராத்தனை நற்கருணை ஆசிா் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10ஆம் திருவிழா நேற்று சனிக்கிழமை காலையில் முதல் நற்கருனை திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்றது. தென் மண்டல இளைஞா் இயக்க இயக்குனா் ஜேசுராஜ் திருப்பலியை சிறப்பித்தாா்.
அன்று மாலை 6.30 மணிக்கு முதல் நற்கருணை பெறும் சிறுவா் சிறுமியா்களுக்கான ஜெபமாலை மற்றும் ஆராதனை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட முதன்மைகுரு ரோலிங்டன் மறையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஸ்டேட் பாங்க் காலனி தூய வேளாங்கன்னி மாதா ஆலய பங்குதந்தை ஜெரோசின் தலைமையில் நற்கருணை பவணி நடைபெற்றது. 11ஆம் திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு தேரடி திருவிழா ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. பங்குதந்தை நாா்பட் தாமஸ் தலைமை வகித்தார். விழா ஏற்பாடுகளை வெள்ளப்பட்டி பங்குதந்தை ஏஎஸ் ராஜா, நிா்வாகிகள் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.


