குலசேகரன்பட்டினம் அருகே சாலையில் நடந்து சென்றபோது, ஸ்கூட்டர் மோதியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள சக்கம்மாள்புரம், ராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கெவின். இவரது மனைவி பூவிழி (25). இவர் நேற்று அப்பகுதியில் நடந்த சென்றபோது அவ்வழியே சென்ற ஸ்கூட்டி பெப் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பூவிழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் மங்கையர்க்கரசி வழக்குப் பதிந்து, குமாரபுரத்தைச் சேர்ந்த ஞானராஜ் மனைவி ஷோபனா (37) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


