கிராம உதயம் கிளை அலுவலகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண்மருத்துவ முகாமை நடந்தது. செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளியில் வைத்துநடந்த இந்த முகாமை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். பள்ளி நிர்வாகி ரஹ்மத் முன்னிலை வகித்தார். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். பகுதி பொறுப்பாளர் கண்ணன், தன்னார்வ தொண்டர்கள் விஜய ஏஞ்சல், விஜயகுமாரி, மையத்தலைவர் பாப்பாத்தி, நம்பியம்மாள் மேலாளர் எபன்,மருத்துவர் சிஞ்சு உள்பட பலர் கலந்துகொண்டனர். டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை தலைமை மருத்துவ குழு டாக்டர் லயனல் ராஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் இலவச சிகிச்சை அளித்தனர். தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.


