சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் மாரிமுத்து. இவர் கட்டடத்தொழில் செய்து வந்தார். கடந்த மாதத்திற்கு முன்பு மாரிமுத்து, பைக்கில் சென்றபோது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறி அவரது இருசக்கர வாகனத்தை முறப்பநாடு போலீசார் பறிமுதல் செய்ததுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் பைக் இல்லாமல் வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர் தற்கொலை செய்ததை கண்டித்து அவரது உறவினர்கள் கடந்த மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் தற்கொலை செய்த மாரிமுத்துவின் மனைவிக்கு அரசு வேலை, விதவை ஓய்வூதியம் மற்றும் அரசு நிவாரண நிதி இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாரிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாரிமுத்துவின் மனைவிக்கு அரசு வேலை, விதவை ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் வாகன சோதனையின் போது போலீசார் பறிமுதல் செய்த மாரிமுத்துவின் பைக் அபராதம் செலுத்தாமல் ஒப்படைக்க ஒப்படைக்கப்படும் என்றும் நிவாரணம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இறந்த மாரிமுத்து வீட்டிற்கு நேரில் சென்றார். இறந்த மாரிமுத்து மனைவியிடம் தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அல்லிகுளம் நிலம் எடுப்பு அலுவலகங்களுக்கு புல உதவியாளர் பணி செய்வதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலீலா, செல்வி, தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி, தலையாரி ராஜா, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்


