உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கீம்பூரில் கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு தலைமை வகித்தார். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் தாசன், ராஜவேலு, ஸ்ரீவைகுண்டம் நகரதலைவர் சித்திரை, டி.என்.டி.யூ.சி. சந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட சேவாதள தலைவர் பிச்சைகண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வெள்ளூர் அலங்கார பாண்டியன், சிவகளை பிச்சையா, சிவசுப்பிரமணியன், நயினார், ஸ்ரீவைகுண்டம் வட்டார செயலாளர் கருப்பசாமி, நிலமடயான், யாசர், வழக்கறிஞர் பிரிவு பாலசுப்ரமணியன், நகர செயலாளர் மதிசேகரன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மாரிச்செல்வம், கண்ணன், ஐயப்பன், பூல்பாண்டியன், கந்தன், முத்துக்குமார், இசக்கிராஜா, மகளிர் அணி நிர்வாகிகள் மாரியம்மாள், ஞானபிரகாசி, ராமலட்சுமி, உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.


