செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மீக அருள் கலைச்செல்வர் விருது. குற்றாலத்தில் வழங்கப்பட்டது.
குற்றாலம் காசிமேஜர்புரம் அகத்தியர் ஞானபீடம் அருள்மிகு அகத்தியர் ஸ்ரீசக்கரமகா மேரு பூஜைவிழா இன்று நடந்தது. இதையட்டி கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், ருத்ரம், தன்வந்திரி, மகாலெட்சுமி ஹோமம், உலகநல வேள்ளி பூஜை நடந்தது. அதன்பின் அகத்தியர் என்னும் காவு சாமி ஸ்ரீசெண்பகாதேவி ஸ்ரீகுற்றால நங்கைககு சிறப்பு அபிசேகம் அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் சோமாஸ் கந்தர் குருக்கள் செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி ஜுயர் சுவாமிகள், பெருங்குளம் செங்கோல் மட ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமி, புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி பீடம் பூஜ்ஸ்ரீ பிரணவானந்தர் உள்பட பல சுவாமிகள் உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி ஜுயர் சுவாமிகள் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு “ஆன்மீக அருள் கலைச்செல்வர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அகத்தியர் ஜீவநாத பிரம்மசுவடி அருள்வாக்கு சித்தர் முத்துகுமாரசாமி செய்திருந்தார்.


