தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் லெட்சுமி பிரபா தலைமையில் போலீசார் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநாபமங்கலம் மறுகால்மடை அருகே ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு போலீசாரைப் பார்த்ததும் அரிவாளுடன் ஓடியவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் ஸ்ரீவைகுண்டம், வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் அமச்சார் (26) என்பதும், முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்வதற்காக செல்வதும், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் அரிவாள், வாள் வைத்து மிரட்டுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனே போலீசார் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த அரிவாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.


