கருங்குளம் வட்டார இராமானுஜம்புதூர் கிராமத்தில் விவசாய ஆர்வலர் விழிப்புணர்வு கூட்டம் வண்ணமுத்து தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் நெங்கநாதன், பூவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து வரவேற்பாற்றினார்செந்தமிழ் அறக்கட்டளை ஆலோசகர் ஆனந்தன் கருத்துரையாற்றினார். கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தொடங்குவது, கால்நடை மருத்துவமனை ஆரம்பித்தல், சாலை வசதி மற்றும் குடிமராமத்து பணிகளைத் தொடங்குவது,வேளாண் இடுபொருட்கள் விரைவில் கிடைக்கும் வழி செய்வது ,விவசாயிகளுக்கான அரசுத் திட்டங்களை விழிப்புணர்வு கூட்டங்கள் வாயிலாகக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. விவசாயிகள் கிருஷ்ணன் ,சங்கரநாராயணன், முத்துக்குமார், பேச்சிமுத்து ,வேலு, நம்பி, சங்கர் லால் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்


