இணையவழியில் தமிழக முதல்வருக்கு வரலாற்று ஆய்வாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் நெல்லையில் 15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைப்பதாக சட்டமன்றத்தில் விதி 110 கீழ் அறிவித்தது சார்பாக மாவட்ட காப்பாட்சியர் சிவசக்தியே வள்ளி, புகழ்பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பொதிகை தமிழ் சங்க நிறுவனர் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் ராஜேந்திரன், தூய யோவான் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் ஜோசப், தூய யோவான் கல்லூரி மாணவர் சூர்யா ஆகியோர் இணைந்து நெல்லை வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று மாணவர்கள் இணைந்து இணையவழியில் நன்றி தெரிவித்தனர்.


