ஸ்ரீவைகுண்டம் பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திரிபுராவில் மாநிலக்குழு அலுவலகத்தையும், மாவட்ட குழு அலுவலகங்களையும், ஊழியர்களில் இல்லங்களையும், மாநில பிஜேபி அரசு துணையோடு கொலைவெறி தாக்குதல் நடத்தி தீயிட்டுக் கொளுத்தியதை கண்டித்தும், கொலைவெறி தாக்குதலை கண்டித்தும் இன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீவைகுண்டம் பஜாரில் ஒன்றிய குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார், போக்குவரத்து ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி உறுப்பினர்கள் சங்கிலி பூதத்தான், கணேசன், முருகன், மாயாண்டி, லெட்சுமி, சண்முகத்தாய், ராமச்சந்திரன் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டம் கலந்து கொண்டனர்.


