எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பாரதி புரஸ்கார் விருதை மதுரையில் லேனா தமிழ்வாணன் வழங்கினார்.
மகாகவி பாரதியார் அமரத்துவம் அடைந்து நூற்றாண்டு விழா மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை பின்புறம் உள்ள ஹோட்டல் ராம் ரத்னா ரெசிடென்சியில் நடந்தது. திருவாரூர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். விருதுநகர் அரசு மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சங்கு மணி , மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்மன் மல்லிகை நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட 25 பேருக்கு பாரதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. கலைமாமணி எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஊருக்கு உழைத்திடல் யோகம் என்ற தலைப்பில் பேசி அனைவருக்கும் விருது வழங்கினார்.


