கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொங்கராயகுறிச்சி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் போதிய மேல்நிலைத் தொட்டி இல்லாமலும் பைப் லைன் இல்லாமலும், வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கினால் குடிநீர் பிரச்சனை வரும் எனத் தெரிவித்தும் மேலும் தெருவிளக்கு சரியாக எரியவில்லை எனவும் இப்புகார்களை அதிகாரிகள் சரிசெய்து தரவில்லை எனத் தெரிவித்து அனைத்து வார்டு உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். இதை நமது வணக்கம் திருவைச் செய்தி சேனலும் பிரசுரம் செய்திருந்தது. இந்த தகவல் வாட்ஸ்அப் மூலம் அனைத்து அதிகாரிகளுக்கும் சென்றடைந்தது. இதனால் சமரச கூட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய பொறியாளர் சித்திரை முன்னிலை வகித்தார். கொங்கராயகுறிச்சி வார்டு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். வார்டு உறுப்பினர்கள் மேல்நிலைத்நீர்த்தேகக தொட்டி பணியினை முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்றும், புதிய பைப்லைன் அமைத்து குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இப்பணிகள் முடிந்த பின் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கினால் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரரை நேரில் வரவழைத்து விரைவில் வேலை முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். இதன் படி ராஜினாமா எதுவும் செய்யப்போவதில்லை எனச் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாகக் கடிதம் அளித்துள்ளனர். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. பிரச்சனையை விரைந்து முடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, மற்றும் பொறியாளர் சித்திரையைப் பொதுமக்கள் பாராட்டினர்.


