திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரிக்கு ரூபாய் 29 லட்சம் ஆராய்ச்சி நிதி மத்திய அரசு வழங்கியது.
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கடந்த 1995ஆம் ஆண்டு முதல் சிறப்பாகக் கல்விப் பணி ஆற்றி வருகிறது. இங்கு கட்டிடவியல் துறை, இயந்திரவியல் துறை ,கணினித்துறை மின்னியல், மற்றும் மின்னணுவியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை, ஆகிய 6 இளநிலைப் பட்டப் படிப்புகளும் கணினித்துறை, v.L.s டிசைன் வணிக நிர்வாக துறை ஆகிய 3 முதுநிலை பட்டப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன இக்கல்லூரி ஐஎஸ்ஓ 9001 2015உலக தரச்சான்று பெற்ற நிறுவனம் ஆகும். கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 2016ம் ஆண்டு ஆளில்லா விமானத்தின் பார்வையை நிர்ணயிக்கும் திட்டத்தை வெற்றிகரமாக வெற்றி பெற்ற மாணவர்கள் இந்திய பொறியாளர் நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களில் இருந்து நிதி உதவி பெற்று வெற்றிகரமாக பல ஆராய்ச்சிகளைச் செய்து உள்ளனர்.
மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் ஆராய்ச்சி பணிகளுக்கு பேராசிரியை மணிமாலா மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கழகம் தானாக இயங்கும் ஆளில்லா விமானத்தை கட்டுப்படுத்தும் வழி முறையை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு 29.7 லட்சம் நிதியுதவி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு ஆராய்ச்சி பணி மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் இந்த ஆராய்ச்சி பணிக்காக பொறியியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இரண்டு இளநிலை ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள் .இப்பகுதிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 நாட்களுக்குள் தங்களது முழு பயோடேட்டாவை manimala@drsacoe.comஎன்ற முதன்மை ஆய்வாளரின் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புரோகிராமிங் மற்றும் கேட் மதிப்பெண் பெற்று உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 34,100ம் சம்பளம் மூன்றாவது வருடம் மாதம் துபாய் இருப்பது 38,500 சம்பளமாக வழங்கப்படும் மேலும் தகவல்களுக்கு 04639-220750 என்ற தொலைபேசி எண்ணில் மின்னியல் துறை தலைவரை தொடர்பு கொள்ளலாம் மாறாக ஆராய்ச்சி பணிக்காக இந்திய அரசு நிதி உதவி பெற்ற பேராசை மணிமாலாவை கல்லூரி நிர்வாகத்தினர் முதல்வர் மற்றும் பேராசிரியர் பாராட்டினர்


