பாறைக்காட்டில் டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு மின் விநியோகப் பிரிவில், குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரி செய்யும் பொருட்டு, தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஞானேஸ்வரன் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி ஊரகம் செயற்பொறியாளர் பத்மா வழிகாட்டுதலின் படி இன்று வடவல்லநாடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாறைக்காட கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா இன்று நடந்தது. 8 லட்சம் மதிப்பில் 63 கிலோ வாட் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வடவல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் பேபிசங்கர் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரகம் உதவி செயற்பொறியாளர் உமையருபாகம், வல்லநாடு உதவி மின் பொறியாளர் சுரேஷ்குமார், ஆக்கமுகவர் பால்ராஜ், மின் பாதை ஆய்வாளர் பெருமாள், கம்பியாளர் லெட்சுமண பெருமாள், பாண்டி, நாகராஜ், பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் சங்கர் நன்றி கூறினார்.


