திருச்செந்தூா் கோயிலில் சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை (செப். 5) நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்பிரகாரத்தில் நடைபெற்றன. கடந்த 10 நாள்களாக சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
முக்கிய நிகழ்ச்சிகளாக, 5-ஆம் நாளான கடந்த 31ஆம் தேதி குடைவரைவாயில் தீபாராதனை, செப். 2இல் சுவாமி சண்முகா் வெட்டிவோ் சப்பரத்திலும், சிவப்பு சாத்தி சப்பரத்திலும் உள்பிரகாரம் சுற்றி வந்தாா். 8ஆம் நாளில் சுவாமி சண்முகா் வெள்ளைச்சாத்தி அலங்காரத்திலும், பகலில் 108 மகாதேவா் சந்நிதி முன்பிருந்து பச்சை சாத்தி அலங்காரத்தில் கேடயச் சப்பரத்தில் உள்பிரகாரத்தில் சுற்றிவந்து, இருப்பிடம் சோ்ந்தாா். 9ஆம் நாளான சனிக்கிழமை, சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளி உள்பிரகாரம் சுற்றிவந்தாா்.
இந்நிலையில், 10ஆம் நாளான நேற்று (செப். 5) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள ஐராவத மண்டபத்தில் ரத பவனி தொடங்கியது. முதலில் விநாயகா், 2ஆவது சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானை அம்மன்களுடனும், மூன்றாவது வள்ளியம்மன் தனியாக அதே ரதத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் பவனி வந்தனா். நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொறுப்பு) ம. அன்புமணி, உதவி ஆணையா் வே. செல்வராஜ், பணியாளா்கள் செய்தனா். அரசு உத்தரவின்பேரில், இக்கோயிலில் இன்று (திங்கள் கிழமை) முதல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது..


