நாட்டு நலப்பணித் திட்டம் கொரோனா விழிப்புணர்வு – கபசுரக் குடிநீர்ப் பொடி வழங்கும் நிகழ்வு
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வினை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் கபசுரக் குடிநீர்ப்பொடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சின்னத்தாய் அவர்கள் முன்னிலை வகித்தார் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் . உமாபாரதி வரவேற்புரை ஆற்றினார். சாத்தான்குளம் வர்த்தகச் சங்கச் செயலர் மதுரம் செல்வராஜ் அவர்கள் கொரோனா நோய்த் தடுப்புக்கான வழிமுறைகளில் கபசுரக் குடிநீரின் பயன்பாட்டினையும், இயற்கை மருத்துவத்தின் சிறப்பினையும் எடுத்துரைத்தார். இவ்விழாவில் சாத்தான்குளம் காங்கிரஸ் நகரத்தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால் அவர்களும், தி. மு. க. மாவட்ட வழக்கறிஞர் ஜெ. பவுன்ராஜ் அவர்களும் கலந்து கொண்டனர். கல்லூரிப் பேராசிரியர்களும் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சி. வளர்மதி நன்றியுரை ஆற்றினார்.


