அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாணவிகளின் முதல் கட்ட கலந்தாய்வு திங்கட்கிழமை சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் ராணுவத்தின் வாரிசு, மாற்றுத் திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டுப் பிரிவு ஆகியவற்றிற்கான மாணவிகளின் முதல் கட்ட கலந்தாய்வு 23.08.2021 அன்று நடைபெறும். 25.08.2021 அன்று ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளுக்கும், 26.08.2021 அன்று தமிழ் மற்றும் கணினி அறிவியல் பிரிவுகளுக்கும், 27.08.2021 அன்று வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் ஆகிய பிரிவுகளுக்கும் மாணவிகளின் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சின்னத்தாய் அவர்கள் கூறினார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், மற்றும் அதன் நகல்கள், இணையத்தில் விண்ணப்பித்த படிவம், பாஸ்போர்ட் புகைப்படம் -2 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். சேர்க்கை பெற்ற மாணவிகள் கட்டணத்தை இணையத்தில் செலுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


