சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை மாணவிகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்களை www.tngasapg.in , www.tngasapg.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று முதல்வர் முனைவர் இரா. சின்னத்தாய் அவர்கள் கூறினார்கள்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரி உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக்கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்த வேண்டும். மற்றவர்கள் விண்ணப்பக்கட்டணம் ரூ. 58 ம், பதிவுக்கட்டணம் ரூ. 2 ம் Debit card மற்றும் Credit card / Net banking மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவிகள், The Director, Directorate of Collegiate Education, Chennai -6 என்ற பெயரில் 23.08.2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். விண்ணப்பங்களை 23.08.2021 முதல் 01.09.2021 வரை பதிவு செய்யலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சின்னத்தாய் அவர்கள் தெரிவித்துள்ளார்.


