வல்ல நாட்டில் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.
சுகாதாரத் துறையின் தீவிர முயற்சிகளால் கருங்குளம் வட்டாரத்தில் கொரோனா 2வது அலை பரவல் குறைந்து வருகிறது. இச்சூழலில் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து முன் களப் பணியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்ல நாடு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் வைத்து நடந்து. வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்.மு.சுந்தரி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கீழசெக்காரக்குடி அருகேயுள்ள ஹெக்சகான் நியுட்ரிசன் (இண்டர்நேஷனல்) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேலாளர் தமிழரசன் வல்ல நாடு அரசு ஆரம்பச் சுகாதார நிலைய முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்களான மாஸ்க்கை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்.மு.சுந்தரி இடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தர உத்தரவாத பிரிவு மேலாளர் சரவணன்,வணிக மற்றும் ஏற்றுமதி பிரிவின் மூத்த மேலாளர் பாலசுப்பிரமணியம், மனித வள நிர்வாகி சங்கர பாண்டி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்ல நாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.


