ஸ்ரீவைகுண்டம் பகுதியில்
கொரோனா தடுப்பு பணிகளை
தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் ஆய்வு
செய்துங்கநல்லூர் மே5
ஸ்ரீவைகுண்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்.பி வெங்டேஷ் அவர்களோடு பயிற்சியில் ஈடுபட தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் வந்தார். இவர் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சமூக இடைவெளியை மக்கள் கடை பிடிககிறார்களா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடம், மற்றும் மககள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என ஆய்வு செய்தார். புளியங்குளம் முதுமக்கள் தாழி மையத்தினை அவர் ஆய்வு செய்தார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வரும் அகழாய்வு பணிகள் நடைபெறும் சிவகளை, கொற்கை குறித்தும், தற்போது ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மத்திய தொல்லியல் துறை மூலம் அமைய உள்ள அருங்காட்சியகம் அமையும் இடம் குறித்தும் ஆலோசனை செய்தார்.
அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மண்டல துணை வட்டாட்சியர் சங்கரநாரயணன் ஆகியோர் உடனிருந்தனர். முத்தாலங்குறிச்சி காமராசு, தான் எழுதிய ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017என்ற புத்தகத்தை பயிற்சி ஆட்சியருக்கு வழங்கினார். மேலும் ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின் தேவைகள் குறித்தும் எடுத்து கூறினார். தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் சினிமா நடிகர் சின்ன ஜெயந்த் மகன் என்பது குறிப்பிட தக்கது.
அவருடன் பயிற்சி ஆட்சியரின் தனி எழுத்தர் செல்வகுமார், ஸ்ரீவைகுண்டம் வருவாய் ஆய்வாளர் சிதம்பர நாதன், ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்


