வ.உ.சி. 150 ஆண்டின்தொடடக்க விழாவை முன்னிட்டு வ.உ.சி இலக்கிய வானம் அமைப்பு மூலமாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரில் மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரியில் எழுத்தாளர் இளசை அருணா இந்த போட்டியை துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட் அளவிலான பள்ளி மற்றும் கலலூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி தூத்துக்குடியில் உள்ள சிதம்பரனார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான கல்லூரி, மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டி நடுவர்களாக எழுத்தாளர் ஜோல்னா ஜவகர், சொக்கலிங்கம் ஆகியோர் இருந்தனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு சிதம்பனார் நினைவு மேல்நிலைப்பள்ளி தளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் தலைமை வகித்தார். பள்ளித்தலைமையாசிரியர் வள்ளி முத்தையா, வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில் ஆறுமுகம், சைவநெறி காந்தி , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். எழுத்தாளர் ஜோல்னா ஜவகர் துவக்கவுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக வ.உ.சி படத்திற்கு வ.உ.சியின் கொள்ளுபேத்திகள் செல்வி, ஆறுமுகச்செல்வி ஆகியோர் மாலை அணிவித்தனர். டாக்டர் கைலாசம் போட்டிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சந்தான கிருஷ்ணன், ஆவுடையப்பன், சொக்கலிங்கம், காமாட்சி நாதன், கணேசமூர்த்தி, மணிகண்டன், தெய்வநாயகம், செல்வின், ஆறுமுகம், இராமலிங்கம், குமரேசன், திருப்பதி, வைரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். இராகவேந்திரன் நன்றி கூறினார்.


